Home உலகம் விமான பயணத்திற்கு இடையூறு விளைவித்து கோஷமிட்ட இந்தியர் கைது

விமான பயணத்திற்கு இடையூறு விளைவித்து கோஷமிட்ட இந்தியர் கைது

0

விமான பயணத்துக்கு இடையூறு விளைவித்ததாக இந்திய (India) வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அபய் தேவதாஸ் நாயக் என்ற 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈஸிஜெட் விமானம், லண்டன் (London) லூடன் விமான நிலையத்திலிருந்து கிளாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

பயணத்திற்கு இடையூறு 

இதன்போது குறித்த நபர் கோஷம் எழுப்பி பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

இதனடிப்படையில், ஸ்காட்லாந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்பு, கிளாஸ்கோ நகரத்தின் எல்லையில் உள்ள பைஸ்லி ஷெரீப் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version