Home இந்தியா இந்திய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்திய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

0

இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, கடந்த வாரம் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) உரிய ஆதாரங்களுடன் தகவலை வெளியிட்டிருந்தார். 

தேர்தல் ஆணைக்குழு

பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணைக்குழு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் முன்வைத்தார். 

இந்த நிலையில் இன்று காலை ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழு நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். 

இதன்போது காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்காத காரணத்தினால் ராகுல் காந்தி உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version