Home இலங்கை இலங்கையின் தேர்தல்கள் குறித்து பொதுநலவாய அமைப்பு வெளியிட்ட தகவல்

இலங்கையின் தேர்தல்கள் குறித்து பொதுநலவாய அமைப்பு வெளியிட்ட தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நம்பகத்தன்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இருந்ததாக பொதுநலவாய கண்காணிப்பாளர்களின் குழு தெரிவித்துள்ளது.

எனினும் விருப்புரிமை வாக்களிப்பு முறை பற்றிய அறிவையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கு மேலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இரண்டாம் விருப்புத் தெரிவு வாக்கு

1982க்குப் பிறகு முதல்முறையாக பொதுநலவாய அமைப்பில் இருந்து வரவழைக்கப்பட்ட 14 பேர் சுயாதீன  குழுவை வழிநடத்திய குழுவின் தலைவர் டேனி ஃபௌர இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தேர்தல் ஆணையத்தால், உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ​​​​இரண்டாம் விருப்புத் தெரிவு வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டதை தாம் கவனத்தில் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக விருப்பு தெரிவு வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன

இந்த விடயத்தில் ஆணையகம் மிகவும் செயலூக்கமான பங்கை செய்து கொண்டிருந்தது என்றும் டேனி ஃபௌர குறிப்பிட்டுள்ளார் 

NO COMMENTS

Exit mobile version