Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம்

தமிழர் பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானம்

0

வவுனியா – ஓமந்தை சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டடத் தகுதியுடன் கூடிய தடகள விளையாட்டு மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுதத் திலகரத்ணவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த மைதானம் நீண்ட காலமாக பயன்பாடு இன்றி காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் விளையாட்டு துறை அமைச்சர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து அது தொடர்பில் ஆராய்ந்ததன் அடிப்படையில் இன்றைய தினம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரால் வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, பிரதேச செயலாளர் இ. பிரதாபன், விளையாட்டுத் துறை அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version