Home இலங்கை அரசியல் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் விசாரணைக்கு அழைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் விசாரணைக்கு அழைப்பு

0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பல வருடங்களுக்கு முன் பதிவு
செய்த சமூக வலைத்தள பதிவுக்காக பயங்கரவாத புலானாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்க்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்
மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், அகில இலங்கைத் தமிழ்க்
காங்கிரஸின் துணைத் தலைவர்களில் ஒருவரும், எனது நாடாளுமன்ற அலுவலக பணியாளருமான
தர்மலிங்கம் சுரேஷ் அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகத்தில்
வெளியிட்டதாக கூறப்படும் ஒரு பதிவைச் பற்றிய விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப்
பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சிங்கள பௌத்த தேசியவாத கதைக்களம்

கொழும்பில் அமைந்துள்ள பழைய பொலிஸ் நிலையக் கட்டடத் தொகுதியில் உள்ள
பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்திற்கே அவர் விசாரணைக்காக
அழைக்கப்பட்டுள்ளார்.

சிங்கள பௌத்த தேசியவாதக் கதைக்களத்தை சவாலுக்குட்படுத்தும் அரசியல்
கருத்துக்களைப் பேணுவதற்காக துன்புறுத்தப்படுகின்ற பல தமிழ் அரசியல்
செயற்பாட்டாளர்களில் ஒருவராக உள்ளார்.

இத்தகைய சூழலில் ‘அமைப்புமாற்றம்’ எனப்படும் கோஷம் வெறும் பாசாங்காகவே
தெரிகிறது. புதிய அரசாங்கம் கூட தனது முன்னோர்களைப் போலவே செயற்படுகிறது.

சிங்கள தேசம் இஸ்ரேலில் மாறுபட்டது

சிங்கள தேசம் இஸ்ரேலில் இருந்து எந்த வித்ததிலும் மாறுபட்டது அல்ல. தமிழர்களை
அடிமையாக்கி அழிக்கும் அவர்களின் நோக்கம் எப்போதும் மாறப்போவதில்லை.

மாற்றாக
பாதைகள் செயற்பாட்டு வடிவங்கள் மாறலாம். இதை உணராமல் அனுரவை ஒரு மேய்ப்பராக சில
தமிழர்கள் பார்ப்பது அரசியல் வரலாற்று புரிதலற்றது என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version