Home இலங்கை அரசியல் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு : அரச தரப்பின் அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு : அரச தரப்பின் அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Aruna Jayasekara) தெரிவித்துள்ளார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam)  எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கிழக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள்

குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

அத்துடன் கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அருண ஜயசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version