Home இலங்கை அரசியல் மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை – யோஷிதவுக்கு அழைப்பு

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை – யோஷிதவுக்கு அழைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி நேற்று 04 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

மோசடியான முறையில் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பான சம்பவம் தொடர்பிலேயே வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்று காலை 9.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு  சென்ற அவர், பிற்பகல் 1.30 மணியளவில் வெளியேறியுள்ளார்.

குற்ற புலனாய்வு திணைக்களம்

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கு முன்னிலையாகவில்லை.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவையும் அடுத்த வருடம் ஜனவரி 03 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்துவது மற்றும் சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version