Home இலங்கை அரசியல் ஊழல்வாதிகளுக்கு தண்டனை நிச்சயம் : பிரதியமைச்சர் அதிரடி அறிவிப்பு

ஊழல்வாதிகளுக்கு தண்டனை நிச்சயம் : பிரதியமைச்சர் அதிரடி அறிவிப்பு

0

யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் நாங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியாக, மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக பல்வேறு தரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக ஊழல்வாதிகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்போம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital, Batticaloa) வைத்து நேற்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர், ”நாட்டின் தேசிய ரீதியிலான சுகாதாரத்துறை உயரிய மட்டத்தில் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு தரப்பட்ட துறைகளில் பல குறைபாடுகள் காணப்பட்டன.

அது இனவாத ரீதியான பிரச்சினையா அல்லது நிர்வாக ரீதியான பிரச்சினையா என்பது வெவ்வேறு விடயம்.

குறிப்பாக சுகாதாரத் துறையிலும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருந்தன.

கடந்த காலங்களில் பெறுப்புக்கூற வேண்டிய அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

சுகாதார அமைச்சரும் மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அத்துடன் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஊழலற்ற, இனவாதமற்ற அரசியல் கலாசாரத்தை நாம் முன்னெடுத்துள்ள நிலையில் சர்வதேச ரீதியிலான ஆதரவும் எமக்கு கிடைக்கின்றது.” என தெரிவித்தார்.

 

https://www.youtube.com/embed/5IMrEq6EvHk

NO COMMENTS

Exit mobile version