Home இலங்கை அரசியல் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மறைவுக்கு அநுர இரங்கல்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மறைவுக்கு அநுர இரங்கல்!

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின்(Jimmy Carter) மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, தனது டுவிட்டர் தளத்திலேயே இந்த இரங்கலை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100ஆவது வயதில் காலமானார்.

அமைதிக்கான நோபல் பரிசு

தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் ஏனைய அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தவர் இவராவார்.

இதேவேளை, கடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசையும் ஜிம்மி கார்ட்டர் பெற்றிருந்தார்.

மேலும், ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version