Home உலகம் இஸ்ரேலுக்கு கசியும் தரவுகள் : ஈரான் மக்களுக்கு பறந்த அவரச உத்தரவு

இஸ்ரேலுக்கு கசியும் தரவுகள் : ஈரான் மக்களுக்கு பறந்த அவரச உத்தரவு

0

இஸ்ரேலுடன் (Israel)  மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் ஈரானிய (Iran) மக்களது தொலைபேசிகளிலிருந்து வாட்ஸ் அப் செயலியை நீக்குமாறு ஈரானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஈரானில் இருந்து பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் இஸ்ரேலுக்கு பகிரப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்றங்கள் 

ஆனால், ஈரான் அரசின் இந்த வலியுறுத்தலை மெட்டா நிறுவனம் ஏற்க மறுத்துள்ளதோடு இதுபோன்ற தவறான தகவல்கள் தங்களின் சேவைகளை பாதிக்கும், பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பது எங்களின் கடமை என்றும் கூறியுள்ளது.

மேலும், யார், யாருக்கு என்ன செய்திகள் அல்லது குறிப்புகள் அனுப்புகின்றனர், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க மாட்டோம் என்று உறுதியுளித்துள்ளது.

எந்த அரசாங்கத்துக்கும் இந்த தகவல்களை பகிர்வது இல்லை என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலுக்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி “போர் தொடங்குகிறது” என வெளிப்படையான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

இது மத்திய கிழக்கில் பாரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version