Home முக்கியச் செய்திகள் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைத்த ஈரான் அதிபர்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைத்த ஈரான் அதிபர்

0

இரண்டாம் இணைப்பு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியால் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

பெரிய திட்டங்களில் பங்காளித்துவம் உட்பட நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

ஈரான் அதிபர் கலாநிதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) சற்று முன்னர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

உமா ஓயா திட்டம் இன்று (24) ஈரான் அதிபர் தலைமையில் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஈரான் அதிபரின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

ஈரான் அதிபருக்கான வரவேற்பு 

இலங்கை வந்தடைந்த ஈரான் அதிபரை பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) விசேட அழைப்பின் பேரில், ஈரான் அதிபர் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.

ஈரான் அதிபரின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள ஈரான் அதிபரின் பாதுகாவலர்கள்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

https://www.youtube.com/embed/UlO_N3AvkFk

NO COMMENTS

Exit mobile version