ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஈரான் சென்றடைந்துள்ளார்.
இலங்கைக்கு நேற்று(25) வருகை தந்த இவர், ஈரானுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்தார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைத்த ஈரான் அதிபர்
ஈரான் அதிபர்
இதேவேளை ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அதிபர் செயலகத்தில் வைத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்றைய தினம்(25) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என அதிபர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகன்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |