Home உலகம் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது ஈரான்: அதிரும் இஸ்ரேல்

மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது ஈரான்: அதிரும் இஸ்ரேல்

0

புதிய இணைப்பு

ஹைஃபாவின் கிழக்கே உள்ள வடக்கு நகரமான தம்ராவில் உள்ள இரண்டு மாடி வீட்டை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதில் ஒரு பெண் உயிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

இஸ்ரேலின் ஹைஃபா நகரத்தில் டசின் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் தங்குமிடங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலும் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு

ஈரானின் அரச தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின்படி, இன்னும் சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் மீது கடுமையான மற்றும் அழிவுக்கரமான பதிலடித் தாக்குதலை ஈரான் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதல், ஈரானின் முக்கிய இராணுவ தலைவர்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கான பதிலாக வரும் என கூறப்படுகிறது.

ஈரானிய ராணுவம் முழு தயார்நிலையில் உள்ளதாகவும், தாக்குதல் நேரம் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் ஜெருசலேமில் தனது பாதுகாப்பு அமைச்சரவையைக் கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் பரபரப்பான நிலைமை உருவாகியுள்ள நிலையில், உலக நாடுகள் அமைதிக்கான அழைப்புகளை விடுத்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version