ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நோக்கில் ஈரான் அதிபர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல்
ஆனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபரின் இலங்கை விஜயத்தின் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கொழும்பில் உள்ள ஈரான் தூதுவர் தெரிவித்திருந்தார்.
ஈரான் : இஸ்ரேல் மோதல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து : அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை
உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது
இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி ஈரான் அதிபர் இலங்கைக்கு வராவிட்டால் உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகொரிய தலைவரின் பெருமை கூறும் பாடல் வெளியீடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |