Home இலங்கை இலங்கைக்கு இஸ்ரேலில் இருந்து வந்த செய்தி!

இலங்கைக்கு இஸ்ரேலில் இருந்து வந்த செய்தி!

0

இஸ்ரேலியர்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள துரித நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara), இலங்கை அரசாங்கத்திற்கு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு பாராட்டு தெரிவித்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இலங்கை அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் துரிதமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை பாராட்டுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகள்

இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின் தலைவர் அவிவ் எஸ்ட்ரா, இஸ்ரேலிய தூதுவர் நிமல் பண்டாரவை சந்தித்த போது இலங்கை அரசாங்கத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

Source: https://ibctamil.com/article/israel-appreciates-the-sri-lankan-government-1731066188

NO COMMENTS

Exit mobile version