Home உலகம் ஊடகவியலாளர்களை குறிவைத்த இஸ்ரேல் : அதிகாலை நடந்த கோர தாக்குதல்

ஊடகவியலாளர்களை குறிவைத்த இஸ்ரேல் : அதிகாலை நடந்த கோர தாக்குதல்

0

கான் யூனிஸில் (Younis Khan) உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் (Hamas) அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேலினால் திங்கட்கிழமை காலை (07.04.2025) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் ஊடகவியலாளர் அல்-ஃபகாவி கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின்  தாக்குதல்

காசாவில் (Gaza) பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் பிரிகேட்ஸ் இஸ்ரேல் மீது 10 ராக்கெட்டுகளை ஏவியுள்ளதுடன், இஸ்ரேல் இராணுவம் இதற்கான தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் சூளுரைத்துள்ளது.

இதேவேளை, தைபேயில் உள்ள ஒரு சைக்கிள் பழுதுபார்க்கும் கடையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட  ட்ரோன் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய இராணுவம் இரண்டு முறை குண்டு வீசித்தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version