Home இலங்கை அரசியல் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்…! பதுங்கும் டொனால்ட் ட்ரம்ப் – தவிக்கும் இஸ்ரேல்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்…! பதுங்கும் டொனால்ட் ட்ரம்ப் – தவிக்கும் இஸ்ரேல்

0

இஸ்ரேல் (Iran) – ஈரானுக்கு மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா? வேண்டாமா? என்ற விஷயத்தில் கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இப்பிரச்சினைக்குள் செல்லலாமா? வேண்டாமா? என்பதை நான் முடிவெடுப்பேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

கடுமையான விளைவு

ட்ரம்ப் ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை.

எந்தவோர் ஒப்பந்தமும் தெஹ்ரான் யுரேனியத்தை செறிவூட்டுவதை தடைசெய்து, ஈரானின் அணு ஆயுதத்தை அடையும் திறனை தடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை நிறுத்த ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.

You may like this


https://www.youtube.com/embed/fd_lxOKWVNM

NO COMMENTS

Exit mobile version