Home முக்கியச் செய்திகள் அமெரிக்காவால் கடும் அழுத்தம்: ஈரான் மீதான தாக்குதலை மட்டுப்படுத்திய இஸ்ரேல்

அமெரிக்காவால் கடும் அழுத்தம்: ஈரான் மீதான தாக்குதலை மட்டுப்படுத்திய இஸ்ரேல்

0

ஈரான் (Iran) மீதான எதிர்த் தாக்குதலை மட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் (Israel) அமெரிக்காவிற்கு (US) உறுதியளித்துள்ளது.

அதன் படி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் மீதான எதிர்த் தாக்குதல் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களுக்குப் பதிலாக இராணுவ இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று அமெரிக்காவிற்கு உறுதியளித்துள்ளனர்.

பைடனின் எதிர்ப்பு

தெஹ்ரானின் அணு மற்றும் எண்ணெய் ஆலைகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை பகிரங்கமாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), கடந்த வாரம் ஒரு இரகசிய தொலைபேசி அழைப்பின் போது நெதன்யாகுவுடன் இஸ்ரேலின் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அந்த உரையாடலில், நெதன்யாகு ஈரானின் இராணுவ இலக்குகளைத் தாக்கும் தனது திட்டத்தை பைடனிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதி முடிவு

அதன் போது, அணு மற்றும் எண்ணெய் இலக்குகளைத் தவிர்ப்பதற்கான தனது திட்டங்கள் குறித்து நெதன்யாகு, பைடனிடம் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை தொடர்ந்து, நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “நாங்கள் அமெரிக்காவின் கருத்துக்களைக் கேட்கிறோம், ஆனால் எங்கள் தேசிய நலன்களின் அடிப்படையில் எங்கள் இறுதி முடிவுகளை எடுப்போம்” குறிப்பிடப்பட்டுள்ளது.    

NO COMMENTS

Exit mobile version