Home முக்கியச் செய்திகள் ஹிஸ்புல்லாக்களின் மனித கேடயங்களாக UNIFIL: பகிரங்கப்படுத்திய இஸ்ரேல்

ஹிஸ்புல்லாக்களின் மனித கேடயங்களாக UNIFIL: பகிரங்கப்படுத்திய இஸ்ரேல்

0

தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளுக்கு (UNIFIL) தீங்கு விளைவிக்கும் எந்த எண்ணமும் இஸ்ரேலுக்கு இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இஸ்ரேல் “லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதாகவும் அதன் பணியாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் இல்லை” என்று கட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா படையினர் மீதான தாக்குதல் 

சமீபத்திய வாரங்களில் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம், ஐ.நா அமைதி காக்கும் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்களின் தளத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, துருப்புக்களில் ஒரு டஜனுக்கும் அதிகமானவர்களை காயப்படுத்தியதாக ஐ.நா குற்றஞ்சாட்டியிருந்தது.

அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை இராஜதந்திரி ஜோசப் பொரெல் திங்களன்று ஐ.நா துருப்புகளைத் தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என வன்மையாக கண்டித்திருந்தார்.

ஹிஸ்புல்லாக்களின் திட்டம் 

இந்த நிலையில், ஹிஸ்புல்லாக்கள் UNIFIL பணியாளர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும், மோதல் நிலையை உருவாக்குவதற்காக UNIFIL நிலைகளுக்கு அருகிலுள்ள இடங்களில் இருந்து வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் கட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் படி, UNIFIL இற்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் தொடரும் என்றும் UNIFIL தளபதிகளுடன் ஒருங்கிணைத்து சர்வதேச சட்டத்திற்கு இணங்க இஸ்ரேல் செயற்படும் எனவும் கட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version