Home உலகம் காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல்: பலர் பலி

காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல்: பலர் பலி

0

காசாவில் (Gaza) உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் இன்று (16) வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, தாக்குதல் நடத்தப்பட்ட பாடசாலை, அகதிகள் தங்க வைக்கப்பட்ட ஐ.நா. அமைப்பிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

மூன்றாவது தாக்குதல்

கடந்த15 நாட்களில் நடந்த மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.இதனால், காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலை காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கான் யூனிஸை விட்டு வெளியேறும் படி பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டிருந்தது.

ஆபத்தான நடவடிக்கை

இதையடுத்து, அங்குள்ள மூன்று பெரிய மருத்துவமனைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.ஐக்கிய நாடுகள் சபை (UN) இது ஒரு ஆபத்தான நடவடிக்கை என தெரிவித்துள்ளது.

இதேவேளை, கான் யூனிஸில் இருந்து மக்களை வெளியேற்ற கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் இஸ்ரேல் அகதிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. காசாவில் உள்ள பாடசாலைகள் மீது மூன்று தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் ஜூன் (6) அன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version