Home உலகம் லெபனானில் களமிறங்கியுள்ள இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகள்: அச்சப்படுத்தி அடித்தாடப்பட்டுவரும் மக்கள்!

லெபனானில் களமிறங்கியுள்ள இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகள்: அச்சப்படுத்தி அடித்தாடப்பட்டுவரும் மக்கள்!

0

பலருக்கு தங்களுடைய காதுகளையே நம்பமுடியவில்லை..

தாங்கள் கேட்கின்ற செய்திகள் உண்மைதானா என்று திரும்பத் திரும்ப கேட்டு ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் லெபனானிய மக்கள்.

தெற்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்களைக் களையும் முயற்சியில் லெபனான் அரச படைகள் ஈடுபட்டுவருவதாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள்தான் அவர்களை ஆச்சரியத்திலாழ்த்தி வருகின்றது.

உலகின் மிகப்பெரிய பலம் மிக்க ஒரு அமைப்புத்தான் ஹிஸ்புல்லா.
பல யுத்தங்களைக் கண்டு உரமேற்றப்பட்டவர்கள்.
அரசு அல்லாத அமைப்பொன்று உலகில் பலஸ்டிக் ஏவுகணைகளை வைத்திருக்கின்றது என்றால்- அது ஹிஸ்புல்லா அமைப்பு மட்டும்தான்.
அப்படிப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்கள் களையப்படுகின்றது- அதுவும் லெபனான் அரச படைகளால் அது மேற்கொள்ளப்படுகின்றது என்கின்ற செய்தியை அங்குள்ள மக்களால் நம்பவேமுடியவில்லை.

அதைவிட முக்கியமாக, ஹிஸ்புல்லாக்கள் எங்கெங்கெல்லாம் ஆயுதங்களை மறைத்துவைத்துள்ளார்கள் என்று லெபனான் அரசபடைகளுக்கு தகவல் வழங்குவது இஸ்ரேலிய உளவுப் பிரிவுகள் என்கின்ற செய்தியும், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.

என்றைக்குமே நடக்காது என்றிருந்த இந்த அதிசயம் லெபனானில்; எப்படி நடந்தது என்று ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் ஒளியாவனம்:   

https://www.youtube.com/embed/07EcctHjUfU

NO COMMENTS

Exit mobile version