Home உலகம் போர் நிறுத்தத்திற்கு பிறகு பலியான முதல் இஸ்ரேலிய வீரர்

போர் நிறுத்தத்திற்கு பிறகு பலியான முதல் இஸ்ரேலிய வீரர்

0

இஸ்ரேல்-ஹமாஸ் நிறைவேறிய ஒப்பந்தத்துக்கு பிறகு முதன்முறையாக ஒரு இஸ்ரேலிய படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கலேப் ஸ்லீமான் அல் நஸஸ்ரா (வயது 35) என்ற ரஹாத் நகரை சேர்ந்த பெடவின் இனத்தவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் சுரங்க வழியாக வந்து ராக்கெட் குண்டு மற்றும் வெடிகுண்டு மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று படைவீரர்கள்

மேலும், மூன்று படைவீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மார்ச்சில் இடம்பெற்ற சமாதான உடன்பாட்டுக்கு பிறகு ஏற்பட்ட முதல் மரணம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), ஹமாஸ் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version