Home இலங்கை அரசியல் ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் – அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி

ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் – அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி

0

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும்
தனியார் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால்
பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம்
குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணிக்கு
ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் கட்சியின் மத்தியகுழு கரிசனையில் எடுக்கவேண்டும்என்று கோரி
கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று
காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கூட்டத்திற்கு வருகைதரும் மத்தியகுழு
உறுப்பினர்களை அந்த பதாகையினை வாசித்துவிட்டு செல்லுமாறு பொதுச்சபை
உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.

மாவை சேனாதிராஜாவின் பதவிவிலகல் கடிதம்

குறித்த பதாகையில் நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு, பொதுச்சபையை உடனடியாக
கூட்டு, யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம்
மத்தியகுழுவிற்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள், 2019 இல் பொதுச்சபையால்
நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக்குழுவை இயங்கவிடு, மத்தியகுழுவின் பலவீனமான
தீர்மானங்களால் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே என்ற விடயங்கள்
எழுதப்பட்டு
ள்ளது.

இதேவேளை கடந்த மத்தியகுழு கூட்டத்தில் கட்சியின் தலைமை தொடர்பாக விவாதங்கள்
இடம்பெற்று குழப்ப நிலை ஏற்ப்பட்டிருந்தது.

அந்தவகையில் கட்சியின் தலைவரான
மாவை சேனாதிராஜாவின் பதவிவிலகல் கடிதத்தை ஏற்ப்பதா அல்லது அவரே தொடர்ந்து தலைவராக
செயற்ப்படுவதற்கு அனுமதிப்பதா என்பது தொடர்பாக இன்று வாக்கெடுப்பிற்கு
விடுவதற்கு கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்,செயலாளர்
ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான,சி.சிறிதரன்,இரா
.சாணக்கியன்,து.ரவிகரன்,ஞா.சிறிநேசன்,
முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ,சுமந்திரன்,சீ.யோகேஸ்வரன்,சி.சிவமோகன்,
சாந்திசிறிஸ்கந்தராஜா,த.கலையரசன்,சாள்ஸ் நிர்மலநாதன்,உட்பட உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்.
கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா இதுவரை கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.

https://www.youtube.com/embed/vD0NiR_TAnghttps://www.youtube.com/embed/OiLP-AtXoKshttps://www.youtube.com/embed/vD0NiR_TAng

NO COMMENTS

Exit mobile version