Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சி கூட்டத்தில் மூக்குடைக்கப்பட்ட சாணக்கியன்!

தமிழரசுக்கட்சி கூட்டத்தில் மூக்குடைக்கப்பட்ட சாணக்கியன்!

0

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் சாணக்கியனின் கருத்து புறந்தள்ளப்பட்டுள்ளது.

வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் இன்று(14) இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடாத்த வேண்டாம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பதவி விலகியவர் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது என இரா.சாணக்கியன் (R.Shanakiyan) கடும் தொனியில் கூறியுள்ளார்.

இருப்பினும், கூட்டத்திற்கு வருகை தந்த மாவை சாணக்கியனின் பேச்சை பொருட்படுத்தாது இருக்கையில் அமர்ந்த பின்னர் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,

https://www.youtube.com/embed/FtvLNLR4NwU

NO COMMENTS

Exit mobile version