Home இலங்கை அரசியல் சுமந்திரனின் கைப்பாவையான சி.வி.கே : சர்வாதிகார உச்சத்தில் தமிழரசுக் கட்சி

சுமந்திரனின் கைப்பாவையான சி.வி.கே : சர்வாதிகார உச்சத்தில் தமிழரசுக் கட்சி

0

தமிழரசுக் கட்சியில் தொடர் சர்வாதிகார போக்கே காணப்படுகின்ற நிலையில் தற்போது தலைவராகியுள்ள சி.வி.கே சிவஞானமும் (C. V. K. Sivagnanam) அதே நிலையில்தான் கட்டாயம் செயல்படுவார் என பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T. Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சி.வி.கே சிவஞானம் தற்போது பெற்றுள்ள பதில் தலைவர் பதவியை ஒரு காலமும் யாருக்கும் விட்டுகொடுக்கப் போவதில்லை, மரணத்தின் போதும் அவர் குறித்த பதவியுடனேயே இருப்பார் என்ற ஆசை அவரிடத்தில் உள்ளது.

தமிழரசுக் கட்சியில் நிரந்தர தலைவர் என்ற பேச்சுக்கு தற்போது இடமில்லை அங்கு தொடர்ந்து தலைவராக சி.வி.கே சிவஞானம்தான் செயற்படுவார்.

இங்கு சட்ட பயங்கரவாதமும், தனிநபர் சர்வாதிகாரமும் தான் தொழிற்படுகின்றது அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தெரிவு செய்யப்பட்டமைக்காகவும் அதனை தக்க வைத்துகொள்வதற்காகவும் சத்தியலிங்கமும் (P. Sathiyalingam) அதே பாதையில் பயணிக்கின்றார்.

அத்தோடு, அடுத்ததாக குறிவைக்கப்படும் சிறீதரனின் (S. Shritharan) பதவி பறிக்கப்பட்டால் அவர் தேசிய மக்கள் சக்திக்கு செல்வதில் எவ்வித தவறும் இல்லை காரணம் கட்சியில் உள்ளவர்கள் ஜனநாயக்கத்திற்கு எதிராக செயற்படுவார்களாக இருந்தார் அங்கு தனி நபர் விருப்பு வெருப்புக்களை கருத்தில் கொள்வதில் தவறில்லை.

இவ்வாறு சிறீதரன் தேசிய மக்கள் சக்தியில் சென்று இணைவாராக இருந்தால் அங்கு அவரின் பதவி தொடர்ந்து தக்கவைக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக விரிவான விவரங்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/PX_FYdq9t70?start=10

NO COMMENTS

Exit mobile version