சிறீதரன் (Sritharan) ஒரு ஆளுமைமிக்க தலைவராக தன்னை காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“சுமந்திரன் (M. A. Sumanthiran) தன்னுடைய தேவைகளுக்காக பல்வேறு காலக்கட்டங்களில் கூறிய கருத்துக்களே இன்று அவருக்கு எதிராக திரும்பி நிற்கின்றது.
தமிழரசுக்கட்சி இந்த நிலைக்கு வந்ததற்கு சுமந்திரன் தான் காரணம் என்று கூறிய சி.வி.கே சிவஞானம், தற்போது தேசிய பட்டியலினூடாக நாடாளுமன்றம் செல்வதற்கு சுமந்திரன் தான் தகுதியானவர் என கூறுகின்றார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரும் தமிழரசுக்கட்சியினர் முன்னர் போன்றே இருக்க போகின்றார்கள் என்றால், இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.” என்றார்.
இது தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…
https://www.youtube.com/embed/5-X7ltRbPrI