Home உலகம் இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பு

இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பு

0

இத்தாலியில் (Italy) குடியேற விரும்புபவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அரிய வாய்ப்பொன்றை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ட்ரெண்டினோ (Trentino) நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் பணம் வழங்க முடிவு செய்துள்ளது.

இத்தாலி அரசின் நிபந்தனை 

இதேவேளை, வெளிநாட்டவரும் இந்த வாய்ப்பை பெறலாம் என்றும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

எனினும், அரசாங்கம் கொடுக்கும் வீட்டில் 10 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும் இல்லையெனில் கொடுத்த பணத்தை திரும்ப அரசாங்கத்திற்கே வழங்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இத்தாலியின் ட்ரெண்டினோ கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறி நகர் புறங்களில் தற்போது குடியேறி வருவதால் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version