Home இலங்கை அரசியல் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் : ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சுனா எம்.பி

யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் : ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சுனா எம்.பி

0

Courtesy: பு. கஜிந்தன்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடமானது அமைக்கப்பட்டு, பாவனைக்கு விடாது வெறுமனே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

2014 ஆண்டு அமைக்கப்பட்ட  குறித்த கட்டடமானது இன்னும் இயங்காத நிலையில் காணப்படுகின்ற போது புதிய கட்டடங்களை அமைப்பது ஏன் என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “ஒரு வைத்தியசாலைக்கு பணிப்பாளர் ஒருவரை தெரிவு செய்யும் போது வாரிய சான்றிதழ் (Board Certificate) அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால் வடக்கு மாகாணத்தை பொருத்தமட்டில் கடந்த அரசாங்கத்தினால் வாரிய சான்றிதழ் (Board Certificate) இல்லாமல் அமைச்சரவை அனுமதி ஒன்றை பெற்றுக்கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் தான் எழுத்து மூல கடிதம் ஒன்றை வாழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களை கீழ் உள்ள காணொளியில் காண்க.   

செய்திகள் – கஜிந்தன்

https://www.youtube.com/embed/bMZw3d_QyV8

NO COMMENTS

Exit mobile version