Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சி வசமான வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

தமிழரசுக்கட்சி வசமான வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

0

புதிய இணைப்பு

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் தெரிவு
செய்யப்பட்டார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு
செய்வதற்கான கூட்டம் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்
பாபு தேவநந்தினி தலைமையில் இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 8
பேரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் 5 பேரும் அகில இலங்கை தமிழ்
காங்கிரஸ் சார்பில் 4 பேரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேரும் ஈழமக்கள்
ஜனநாயகக் கட்சி சார்பில் 2 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 1 வரும்
தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் 2 பேரும் தேர்தல் மூலம் தெரிவு
செய்யப்பட்டனர்.

தவிசாளர் தெரிவு

இந்த நிலையில் தவிசாளர் தெரிவுக்கு கந்தையா யசீதனின் பெயரும் ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதனுடயை பெயர்களும்
முன்மொழியபட்டது.

தவிசாளர் தெரிவிற்காக நடத்தப்பட்ட பகிரங்க
வாக்கெடுப்பில் கந்தையா யசீதன் தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிடிபி, ஐக்கிய மக்கள்
சக்தி மற்றும் தமிழரசு கட்சியின் 13 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு
செய்யப்பட்டார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாகராசா பகீரதனுக்கு 9
வாக்குகள் அளிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி 6 வாக்குகளை கொண்டிருந்த பொழுதிலும் நடுநிலை வகித்தது.

இதேவேளை உப தவிசாளராக பேரின்ப நாயகம் சுபாகரின் பெயர் இலங்கை தமிழரசு
கட்சியின் சார்பிலும் மற்றும் தர்மகுலசிங்கம் உதயகுமாரின் பெயர் சங்கு
சைக்கிள் கூட்டணியின் சார்பில் முன்மொழியப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தமிழரசு
கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

முதலாம் இணைப்பு

ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஆட்சியைக் கைப்பற்றிய சைக்கிள் கூட்டணி

யாழ். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக (Kayts Pradeshiya Sabha) அகில இலங்கை தமிழ் காங்கிரஸை
சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு
செய்வதற்கான அமர்வு இன்று (20) காலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவிற்காக அகில
இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனும் முன்மொழியப்பட்டனர்.

 5 உறுப்பினர்கள் வாக்களிப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவுக்கு ஆதரவாக, அகில
இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய
கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என
மொத்தமாக 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அத்தோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனுக்கு
ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 5 உறுப்பினர்கள்
வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது
நடுநிலையாக செயற்பட்டனர்.

இதன் மூலம் திருவுளச்சீட்டு முறையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.

பிரதித் தவிசாளர் தெரிவு

தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை
சேர்ந்த
செபஸ்தியாம்பிள்ளை லெனின் றஞ்சித் ஏகமனதான தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

13 உறுப்பினர்களை கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி
சார்பில் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய
மக்கள் சக்தி சார்பில் தலா 3 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சி
சார்பில் 2 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் ஒரு
உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/S0QrLKNrRYg

NO COMMENTS

Exit mobile version