Home முக்கியச் செய்திகள் யாழ். ஆனந்தனால் கடத்தபட்டவர்களின் பட்டியல்! தீவிரமடையும் புலனாய்வு விசாரணை

யாழ். ஆனந்தனால் கடத்தபட்டவர்களின் பட்டியல்! தீவிரமடையும் புலனாய்வு விசாரணை

0

தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியாகும் விசாரணை அறிக்கைகள் மற்றும், அவருக்கு உதவிய தரப்பின் விபரங்கள் தென்னிலங்கைக்குள் மட்டுப்படாது தமிழர் பகுதிகளிலும் தீவிர விசாரணைக்குளாகியுள்ளன.

இலங்கை மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களில் பேசப்படும் விடயமாக மாறியுள்ள இஷாரா, அவருடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் உள்ளிட்ட விடயங்களிலான விசாரணையில் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பிரிவுகளும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இஷாராவை இலங்கையில் இருந்து நாடுகடத்த உதவியதாக கருதப்படும் யாழ். ஆனந்தன் தொடர்பில் வெளியாகும் விடயங்கள் விசாரணை வலைக்குள் சிக்கவுள்ள அடுத்த நபர் யார்? என்ற எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் யாழ். ஆனந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அவரிடம் இருந்து மீட்க்கப்பட்ட ஆயுதங்கள், அவர் ஆட்கடத்தலுக்காக பயன்படுத்திய நகர்வுகள் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி… 

https://www.youtube.com/embed/92kW3vNVauw

NO COMMENTS

Exit mobile version