Home ஏனையவை ஆன்மீகம் யாழ்.நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானம்

யாழ்.நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானம்

0

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது சர்வதேச தமிழ் பெளத்த காங்கிரஸினதும் சர்வதேச இந்து பெளத்த ஒற்றுமைக்கான
அமைப்பினதும் ஏற்பாட்டில் நடைபெற்றது.

விசேட பூஜை வழிபாடுகள்

யாழ்ப்பாணம், ஆரியகுளம் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்திலிருந்து விசேட பூஜை
வழிபாடுகளுடன் பெரஹராவானது ஆரம்பமாகி யாழ்ப்பாணம் நாக விகாரையை வந்தடைந்தது.

அதன்பின்னர் விசேட வழிபாடுகளுடன் வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும்
இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர்
நாகலிங்கம் வேதநாயகன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், நாகவிகாரை
விகாராதிபதி சிறி விமலதேரர், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, மறவன்புலவு க.சச்சிதானந்தன், யாழ்.
மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சி.பி. விக்கிரமசிங்க மற்றும் சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபர் திலக் தனபால உட்படப் பலரும் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version