Home முக்கியச் செய்திகள் யாழிலிருந்து கொழும்பு சென்ற தொடருந்து மோதி இளைஞன் பலி

யாழிலிருந்து கொழும்பு சென்ற தொடருந்து மோதி இளைஞன் பலி

0

யாழ்ப்பாணம் (Jaffna) – காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (11) கிளிநொச்சி – தொண்டமாநகர் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த கறுப்பையா ஐங்கரன் என்ற 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மது போதையில் இருந்ததன் காரணமாக அவர் தொடருந்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும், விபத்து தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version