Home இலங்கை சமூகம் யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மே மாத முதல் வாரத்தில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘சிவகங்கை’ என்ற பெயரைக் கொண்ட இந்த பயணிகள் கப்பலில் பயணிகளுக்கான அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்றும் எவ்வளவு நிறை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

ஆரம்பமாகும் பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி நெகிழ்ச்சி

தினசரி கப்பல் சேவை

‘சிவகங்கை’ கப்பல் மே மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து (Kangesanthurai) புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவுக்குள் மீண்டும் நுழைந்த சீன உளவுக்கப்பல்

இரு வழிப் பயண கட்டணம்

இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் நுழைவுச்சீட்டுக்களை விற்பனை முகவர் மற்றும் இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட்ட 6 நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version