Home முக்கியச் செய்திகள் வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று

0

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். (Jaffna) வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

குறித்த திருவிழாவானது, இன்று (16) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று தொடர்ந்து சுவாமி தேர் உலா இடம்பெறவுள்ளது.

ஆலய தேர்த்திருவிழா

அதேவேளை, சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளை (17) மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில் இடம்பெறும்.

இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4 மணிக்கு நடைபெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி 5 மணிக்கு வங்கக்கடல் நோக்கி கொண்டு செல்லப்படும்.

மேலும், மறுநாள் புதன்கிழமை (18)  காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெற்று இறுதியாக அன்றைய தினம் மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும்.

இந்நிலையில் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/jaffna-vallipuram-temple-festival-starts-today-1726437148?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version