Home முக்கியச் செய்திகள் யாழ்.வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

யாழ்.வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

0

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். (Jaffna) வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

குறித்த திருவிழாவானது, இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று தொடர்ந்து சுவாமி தேர் உலா இடம்பெறவுள்ளது.

ஆலய தேர்த்திருவிழா

அதேவேளை, சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளை மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில் இடம்பெறும்.

இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4 மணிக்கு நடைபெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி 5 மணிக்கு வங்கக்கடல் நோக்கி கொண்டு செல்லப்படும்.

மேலும், மறுநாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெற்று இறுதியாக அன்றைய தினம் மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும்.

இந்நிலையில் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version