Home முக்கியச் செய்திகள் நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (16.09.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை

வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source: https://ibctamil.com/article/heavy-showers-in-western-and-southern-areas-1726445757?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version