Home முக்கியச் செய்திகள் ரி.ஐ.டியால் கைதான யாழ். இளைஞன்  – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவூ

ரி.ஐ.டியால் கைதான யாழ். இளைஞன்  – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவூ

0

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவானது இன்றைய தினம் (4.12.2024) யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடுப்பு பிரிவு (TID) காவல்துறையினரால் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன்   அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 72 மணி நேர விளக்கமறியலுக்குப் பின்னர் இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் நீதவான் விடுவித்ததுடன் வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version