Home சினிமா பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன்? உறுதி செய்யப்பட்டது

பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன்? உறுதி செய்யப்பட்டது

0

ஜனநாயகன் 

ஜனநாயகன் படம் ஆரம்பித்ததில் இருந்தே இப்படம் தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்கிற பேச்சு தொடர்ந்து இருக்கிறது. பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி தெலுங்கில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

விஜய்க்கு பகவந்த் கேசரி படத்தை தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்கிற ஆசை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானதில் இருந்து நேற்று வெளிவந்த முதல் பாடல் வரை பல விஷயங்கள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப் போவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பகவந்த் கேசரி ரீமேக்கா? 

பகவந்த் கேசரி படத்தில் பாலகிருஷ்ணா, காஜல் மற்றும் ஸ்ரீலீலா ஒன்றாக சேர்ந்து நடனமாடுவது போல் ஜனநாயகன் படத்திலிருந்து வெளிவந்த தளபதி கச்சேரி பாடலில் விஜய், பூஜா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடனமாடுகிறார்கள்.

மேலும் பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீலீலா கழுத்தில் அணிந்திருந்த செயின் போலவே மமிதா பைஜூ இப்படத்தில் அணிந்துள்ளார். இப்படி பல விஷயங்கள் ஒத்துப் போவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். சிலர் இதனை ட்ரோல் செய்கிறார்கள்.

திரை வட்டாரத்தில் பேசுவது என்னவென்றால், பகவந்த் கேசரி படத்தில் இருந்த சில காட்சிகள் இப்படத்திலும் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் உள்ள அரசியலையும் ஜனநாயகன் பேசியிருக்கிறது. அதுதான் இயக்குநர் ஹெச். வினோத்தின் டச் என கூறுகிறார்கள்.

ஆனால், என்னவாக இருந்தாலும் ஜனவரி 9ஆம் தேதி தளபதி ரசிகர்களால் திரையரங்குகள் திருவிழா கோலத்தில் தெறிக்கப்போவது உறுதி.

NO COMMENTS

Exit mobile version