Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

0

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் (United Lanka Podujana Party) சார்பில் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) போட்டியிட தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய (Nihal Premakumara Deshapriya) இன்று (14) ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.

ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவராக சில காலம் பணியாற்றியிருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் 

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று (14) நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/janaka-ratnayake-places-deposit-president-election-1723616065

NO COMMENTS

Exit mobile version