Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கத்திற்காக முன் வந்துள்ள வெளிநாடு

அநுர அரசாங்கத்திற்காக முன் வந்துள்ள வெளிநாடு

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் முக்கிய பணியான ன ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவை ஜப்பான் (Jappan) வழங்குமென இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகோஷி ஹிடேகி (HE MIZUKOSHI Hideaki) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை நேற்றையதினம் (26) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே ஜப்பானிய தூதுவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அபிவிருத்தி திட்டங்கள்

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் தற்போது இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய தூதுவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கண்டி நகர நீர் முகாமைத்துவ திட்டம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் இரண்டாம் கட்டம், டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல்மயமாக்கல் திட்டம், தேசிய ஒலிபரப்பு மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி திட்டம், அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் கட்டம் 2, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், களுகங்கை நீர் வழங்கல் திட்டம் மற்றும் சுகாதாரம். மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டு திட்டம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் ஹபரணை – வெயங்கொட கடத்தல் பாதை திட்டம் மற்றும் அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டம், களனி கங்கை புதிய பாலம் நிர்மாணத் திட்டம் தொடர்பான கொடுப்பனவுகள் இதில் உள்ளடங்குவதாக ஜப்பானிய தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version