இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஸ்சொமடோ அக்கியோவிற்கும் (Isomata Akio) இலங்கை
தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் ஜப்பான் (Japan) தூதரகம் மலையக மக்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது குறித்து செந்தில் தொண்டமான் நினைவூட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மலையக மக்களுக்காக வலுவான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சந்திப்பு
மேலும், புதிய ஜப்பான் தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில், மலையகத்திற்கு முதல் விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.