Courtesy: Sivaa Mayuri
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜப்பானிய அரசாங்கம், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஜப்பான் சென்றுள்ள திஸாநாயக்க, ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுகே யோசிஃபுமி (TSUGE Yoshifumi) ஐ இன்று(22) சந்தித்தார்.
நீண்டகால நட்புறவு
தமது கலந்துரையாடலில், இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அனுரகுமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக திஸாநாயக்க கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில், ஜப்பானின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் TSUTSUMI Taro, பிரிவின் பிரதிப் பணிப்பாளர்IWASE Kiichiro மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜப்பானிய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.