Home இலங்கை இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள ஜப்பானிய நாசகாரக் கப்பல்

இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள ஜப்பானிய நாசகாரக் கப்பல்

0

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான நாசகாரக் கப்பல் ‘MURASAME’ உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்துள்ளது.

குறித்த கப்பல், இன்று (22) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த ‘MURASAME’ நாசகாரக் கப்பலானது, 151 மீட்டர் நீளமும் 200 பேர் கொண்ட பணியாளர் குழாமையும் கொண்டள்ளது.

வெளியேறும் திகதி

இதேவேளை, கப்பலின் கட்டளை அதிகாரியாக ஹயாகவா மசாஹிரோ செயற்பட்டு வருகிறார்.

அத்தோடு, கப்பல் நாட்டை விட்டு புறப்படும் வரையில், அதன் பணிகுழாமினர் நாட்டின் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“MURASAME” கப்பல் அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் செவ்வாய்க்கிழமை (25) நாட்டை விட்டுப் புறப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version