Home இலங்கை அரசியல் சீனாவிற்கு சென்றார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

சீனாவிற்கு சென்றார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

0

சிறிலங்கா அமைச்சர் ஜீவன் தொண்டமான் (JeevanThondaman) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவுக்கு (China) சென்றுள்ளார்

உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (23) சீனாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவருடன் நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றுள்ளதாக ஜீவன் தொண்டமானின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விசேட உரை

இந்த நிலையில், ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜீவன் தொண்டமான், சீனாவில் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரையாற்றவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சீன விஞ்ஞான ஆய்வகத்தின் (JRDC-Joint Research and Demonstration Center for Water Technology) அழைப்பையேற்று நீர் வளத்துறை, தோட்ட மற்றும் கிராமிய நீர்வளங்களை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை வடிவமைத்தல் தொடர்பான நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/jeevan-thondaman-china-visit-youth-leaders-summit-1719210425

NO COMMENTS

Exit mobile version