மலையக அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் (Ceylon Workers Congress) பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் 1700ரூபாய் சம்பள விடயத்தில் பெருந்தோட்ட
நிறுவனங்களோடு மலையக அரசியல்வாதிகள் சிலர், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கோரியிருக்கும் சம்பள தொகையினை வழங்க வேண்டாமென டீல் பேசியுள்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கஹவத்தை (Kahawatha) பகுதியில் நேற்று (04) இடம் பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்
கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் யுவதிகள்
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், “கடந்த காலங்களின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கோரி மலையக இளைஞர் யுவதிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மலையகத்தில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகள் கானி உரிமையினை கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தால் கானி உரிமையினை வெகுவிரைவாக பெற்றிருக்கலாம்.
இந்திய (India) அரசாங்கம் 14 ஆயிரம் வீட்டுத் அதிட்டத்திட்டங்களை வழங்கியிருக்கிறது
மலையகத்திற்கு 176,000 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகிறது வடக்கு மற்றும்
கிழக்கில் இந்திய அரசாங்கத்தின் ஊடாக 28ஆயிரம் வீடுகளை முலழுமையாக அமைத்து
மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மலையகத்தில் மாத்திரம் 4000ம்
வீடுகளுக்கு தட்டு தடுமாறி கொண்டு இருக்கின்றோம். அதற்கு காரணம் வடகிழக்கில்
உள்ள மக்களுக்கு சொந்த மற்றும் அரச கானியும் உள்ளது. மலையகத்தில் உள்ள அனைத்து
மக்களும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜையாக இருக்கிறார்கள் 2020ம் ஆண்டு நாடாளுமன்றம் சென்ற காலத்தில் இருந்து இதுவரையிலும் மலையகமக்கள் தொடர்பாக
பேசப்பட்டு வந்துள்ளேன்.
அதற்கு காரணம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து நாங்கள் போராடி கொண்டுயிருக்கின்றோம் நாங்கள் ஒருபோதும் எந்த அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்ததில்லை.
ஆட்சிமாற்றம்
2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் இடம்பெற்ற பிறகு பெருந்தோட்ட நிறுவனங்களின் ஆதிக்கம்
அதிகரித்துள்ளது 1700ரூபாய் சம்பளத்திற்கு ஆயிரத்திஎட்டு விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை
சம்பளம் 1350ரூபாய் மேலதிக கொடுப்பணவு 350ரூபாய் என வர்த்தமானி வெளிவந்தவுடன்
மாற்றுக்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் நாங்களும் சம்பள விடயத்திற்கு ஆதரவு
வழங்கியதாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தார்.
அதே வர்த்தமானியினை மீண்டும் வெளியிடும் போது இது தோட்ட தொழிலாளர்களை
ஏமாற்றும் நடவடிக்கை என கூறுகிறார் இதற்கு காரணம் அப்போது தேர்தல் இல்லை
தற்போது தேர்தல் உள்ளது நான் அரசியலுக்கு வந்த காலப்பகுதியில் நான் சின்ன
பையன் என விமர்சித்தார்கள்.
ஆனால் நான் சிறியவனாக இருந்தாலும் வாக்குருதி
வழங்கயபடி ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்தேன் 1700 ரூபாய் கிடைக்காது
என மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
பெருந்தோட்ட நிறுவனங்கள்
ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஒரு சதம்
கூட அதிகரிக்க முடியாது என அறிவித்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது
1350ரூபாய் அடிப்படை சம்பத்திற்கு வந்துள்ளார்கள் வரலாற்றை எடுத்து
நோக்குகின்ற போது1948 முதல் 1977வரை நமக்கு பிரஜா உரிமையை கிடையாது மலையகத்தை
பொருத்தவரையில் 2000ம் அல்லது 8000ம் குடும்பங்களுக்கு ஒரு கிராம
உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்திற்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் தேவை
எதிர்கட்சியினருக்கு மூன்று முறை தேசிய பட்டியல் கிடைத்தது அதனை அவர்கள்
பெற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் நான் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர்கட்சி
தலைவருக்கு அந்த தேசியபட்டியலை வழங்குமாறு கடிதம் எழுதினேன் சிலர் கொள்கை
அரசியலை விட்டு சலுகை அரசியலையே விரும்புகின்றனர். நாம் அனைவரும் ஒரு
ஸ்தாபனத்திற்கும் ஒரு சமூகத்திற்கும் வேளை செய்யவேண்டும் நமக்குள் பிளவுகள்
காணப்பட கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.