Home இலங்கை அரசியல் இலங்கைக்கான நிதியுதவிகளை உறுதிப்படுத்திய ஜப்பானிய நிதி நிறுவனம்

இலங்கைக்கான நிதியுதவிகளை உறுதிப்படுத்திய ஜப்பானிய நிதி நிறுவனம்

0

இலங்கைக்கான நிதியுதவிகள் இடையூறு இல்லாமல் தொடரும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் JICA – இன் இன் மூத்த துணைத் தலைவர்  சோஹெய் ஆகியோருக்கு இடையே இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, ஜப்பானிய உதவியின் கீழ்,கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு

நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் போது வழங்கப்பட்ட உதவியைப் போலவே, எதிர்காலத்தில் இலங்கைக்கு நிதி உதவியை வழங்குவதற்கான தமது உறுதிப்பாட்டையும் ஜெய்க்காவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன்“தூய்மையான இலங்கை” திட்டம் மற்றும் பிற முயற்சிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தமது அமைப் தயாராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version