வாகன இறக்குமதி, வரியை நிறுத்தி வைத்தல் மற்றும் வரி வசூலை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்
இதன்போது, இலங்கைக்கு வாகன இறக்குமதி செய்வதைச் சுற்றியுள்ள சவால்களை கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வருமான வரிக்கு உட்பட்ட ஓய்வு பெற்றவர்களிடமிருந்து கழிக்கப்படும் வரிகளை திருப்பித் தருவதற்கான ஒரு பொறிமுறையின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை
நாடு சீராக மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும், குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.