ரஷ்யாவில்(Russia) தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மக்களிடம் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,சுமார் 140 பேரிடம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
மொரட்டுவ(Moratuwa) காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில் வாய்ப்பு
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாரதி பயிற்சி நிலையமொன்றை நடத்திவருபவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த சாரதி பயிற்சி நிலையத்தை பரிசோதனைக்கு உட்படுத்திய போது 39 கடவுச்சீட்டுக்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பொதுமக்களிடம் 6 முதல் 14 இலட்சம் ரூபா வரையில் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் விசாரணை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகளவில் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டுபெத்த மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.