போதைப் பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும்அது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆந் திகதி பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில் போதைப் பொருட்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் சட்ட நடவடிக்கைக்கமைய 07 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை(24) விசாரணைககு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இலங்கையை உலுக்கிய கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல்
போதைப்பொருட்கள் விநியோகம்
அப்துல் கையூம் பிசால் அகமட் (வயது-24) என்ற சந்தேக நபர் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்ததுடன் அவற்றை உபயோகித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர் கைதாகி உள்ளதுடன் போதைப்பொருள் பாவனைக்காக புனர்வாழ்வு முகாம்களில் சிகிச்சை பெற்றிருந்தார்.
அத்துடன் சந்தேக நபரின் தந்தையார் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். இன் கட்டுப்பாட்டாளராகவும் அம்பாறை மாவட்டத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
மேலும் குறித்த சந்தேக நபர் வசம் இருந்து 1 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கடந்த வெள்ளிக்கிழமை 17 ஆந் திகதி கைது செய்யப்பட்டு பெரிய நீலாவணை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |