Home இலங்கை அரசியல் சர்வதேசத்தால் தமிழர்களுக்கு வழங்கிய நிதிக்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஜேவிபி

சர்வதேசத்தால் தமிழர்களுக்கு வழங்கிய நிதிக்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஜேவிபி

0

சுனாமி பொதுக்கட்டமைப்பானது பல நாடுகளின் அதாவது அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் உட்பட்ட நாடுகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

ஆனால் அதற்கு சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கம் அனுமதி கொடுக்காத போதும் அதன்பின் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் பின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அந்த கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்த காலப்பகுதியில் தென்னிலங்கையில் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அன்று இருந்தது என்பிபி் என தற்போது அறியப்படும் ஜேவிபி ஆகும்.

ஆனாலும் அந்த ஆர்ப்பாட்டங்களினால் பொதுக்கட்டமைப்பு குழம்பவில்லை. அது குழம்பியதற்கு முதன்மைக்காரணம் ஜேவிபியினர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தமையே ஆகும்.

அதாவது இந்த பொதுக்கட்டமைப்பு அன்றைய அரசியலமைப்பை மீறுவதாகக் கூறியே இந்த வழக்கை பதிவு செய்தார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் (V. Uruthirakumaran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்….

NO COMMENTS

Exit mobile version